Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 22, 2016

ரஷியாவின் கைப்பாவை டொனால்ட் டிரம்ப் - ஹிலாரியின் செயலாளர் குற்றச்சாட்டு




ரஷ்யாவின் கைப்பாவையாகவே டொனால்டு டிரம்ப் செயல்படுகிறார் என ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சார மேலாளர் ராபி மோக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஏபிசி தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

"ரஷ்யாவின் கிரெம்ளின் பகுதியிலிருந்து சிலர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்துக்கு வேலை செய்து வருகின்றனர். இதிலிருந்து ரஷ்யா டொனால்டு டிரம்புக்கு ஆதரவளிப்பது தெளிவாக விளங்குகிறது.

ஆனால் தற்போது நமக்கு தெரிய வேண்டியது கிரெம்ளினிலிருந்து உதவுவது யார் என்பதை டிரம்ப் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். டிரம்ப் ரஷ்யாவின் கைப்பாவையாக செயல்படுகிறார். ரஷ்ய அதிபர் புதினின் கருத்துகளை டொனால்டு டிரம்ப் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்.

டிரம்பின் ஆலோசகர்கள் சிலர் ரஷ்ய நிறுவனங்களுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ளனர். மேலும் கடந்த சில வரங்களாக டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் ரஷ்யாவின் ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் தொடர்பு கொள்ளும் நோக்கில்தான் அமைந்துள்ளது" என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic