Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 25, 2016

நீங்க தலைகீழாக நின்று கேட்டாலும் கர்நாடகத்திலிருந்து தண்ணீர் கிடைக்காது போல...!


தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

சம்பா சாகுபடிக்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் 20க்கும் மேற்பட்டோர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை இன்று பெங்களுருவில் சந்தித்தனர்.

மனித நேய அடிப்படையில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை தமிழக விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்.

இதற்கு பதிலளித்த சித்தராமையா , போதிய மழை பெய்யாததால் கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே காவிரியில் நீர் இருப்பு குறைவாக இருக்கும் , தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் திறக்க முடியாது. இருந்தாலும் பரிசீலித்து நல்ல முடிவாக தெரிவிக்கிறேன். மழை பெய்தால் நிச்சயமாக தண்ணீர் திறந்து விடப்படும் என்று சித்தராமையா கூறியதாக விவசாயி சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic