Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 25, 2016

ஐ.எஸ் அமைப்பில் இருந்து விலகிய இந்தியாவைச்சேர்ந்த பயங்கரவாதி கைது!


ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இருந்து விலகிய இந்தியாவை சேர்ந்த மஜீத் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளான். தனக்கு இந்தியா துரோகம் இழைத்துவிட்டதாக கூறியுள்ளான்.

சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவைச்சேர்ந்த 4 வாலிபர்கள் சிரியா சென்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டதாக தகவல்கள் கிடைத்தது. அதில் ஒருவன் தான் இந்த அரீப் மஜீத் என்பவன். சிரியாவிற்கு சென்ற இவன் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து அவர்களது முகாம்களில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் வேலையை செய்ததாக கூறப்படுகிறது. துவக்கத்தில் தனக்கு தாக்குதல் நடத்த பயிற்சி கொடுப்பதாக கூறிவிட்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்துவிட்டார்கள் என மஜீத் தெரிவித்துள்ளான்.

ஒரு தீ விபத்தில் படுகாயமடைந்த மஜீதிற்கு எந்த மருத்துவ உதவியும் கொடுக்காமல் அவனை கைகழுவியுள்ளனர் ஐ.எஸ் பயங்கரவாதிகள். கடுமையான முயற்சிக்கு பிறகு பயங்கரவாதிகளின் கூடாடத்திலிருந்து தப்பித்து இந்தியாவிலுள்ள தனது குடும்பத்தார்களை தொடர்பு கொண்டு தன்னை எப்படியாவது காப்பாத்துமாறு கெஞ்சியுள்ளான்.

இதனை தொடர்ந்து இந்திய அதிகாரிகள் மஜீதை சிரியாவிலிருந்து மீட்டு இந்தியா கொண்டு வந்து அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் இந்தியா வந்த பிறகு மஜீத் தனக்கு இந்தியா துரோகம் செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளான். இதற்கு பதில் அளித்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது "தடை செய்யப்பட்ட அமைப்பில் சேர்ந்துவிட்டு பின்னர் அங்கிருந்த விலகியவர்களாக இருந்தாலும் அவர்களும் குற்றவாளிகளே, அதுபோன்றவர்களை கைது செய்யவதே நாட்டுக்கு நல்லது என தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic