Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 20, 2016

போலி பெயரில் பா.ஜ.க தலைவர்களுக்கு கொலை மிரட்டல்!



முசாபர்நகர்: போலி ஃபேஸ்புக் கணக்கை வைத்து பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே அஜேய் குமார் என்பவர் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் உள்ளூர் சப்-இன்ஸ்பெக்டரின் மகனாவார். அங்குள்ள மசூதியின் மத தலைவரான மவுலானா சோகின் என்பவரின் பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கினை துவக்கி, அதிலிருந்து பா.ஜ.க எம்.பி ஹகும் சிங், எம்.எல்.ஏ சுரேஷ் ராணா, பஜ்ரங்தள் தலைவர் விவேக் பிரேமி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார். தனது பெயரை வைத்து கொண்டு யாரோ கொலை மிரட்டல் விடுத்து வருகிறார் என காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

இதனை விசாரித்த காவல்துறையினர் அஜேய் குமாரை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். அவரால் பதிவு செய்யப்பட்ட செய்திகள் மற்றும் கருத்துக்களில் உள்ளூர் இந்து அமைப்பினரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic