Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 10, 2016

ஜாகிர் நாயக்கிற்கு தீவிரவாதிகளுடன் தொடர்பா...?


இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பல ஆவணங்கள் கொண்ட அறிக்கையை மும்பை காவல்துறையினர் சமர்பித்துள்ளதை அடுத்து அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு கடும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார் இந்தியாவின் இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக். இவர் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், அவரது பேச்சுக்களை ஆய்வு செய்து அறிக்கையை  சமர்பிக்குமாறு மகாராஷ்டிரா அரசு மும்பை காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து முழு விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் தங்களது அறிக்கையை நேற்று சமர்பித்தனர்.

அந்த அறிக்கையில் ஜாகிர் நாயக்கிற்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் மதமாற்றம், பயங்கரவாத அமைப்பின் தலைவனான ஹபீஸ் சயீத் உடனான தொடர்பு, இன்னபிற பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தினருடனான தொடர்பு என பல்வேறு சட்ட விரோத காரியங்களில் ஜாகிர் நாயக் ஈடுபட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜாகிர் நாயக் நடத்தி வரும் அறக்கட்டளை மற்றும் பீஸ் தொலைக்காட்சி தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

கொடுக்கப்பட்ட அறிக்கை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகிர் நாயக் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை ஜாகிர் நாயக்கின் நடத்திவரும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் முற்றிலுமாக மறுத்துள்ளனர். மும்பை காவல்துறயினர் தெரிவித்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் முழுக்க முழுக்க தவறான தகவல்கள் எனவும் தெரிவித்துள்ளனர். இதுவரை எந்தவிதமான கேள்வி நோட்டீஸ் எந்த அரசு அதிகாரியிடமிருந்தும் தங்களக்கு வரவில்லை என அறக்கட்டளை சார்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic