இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விலாதிமிர் புடின், தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் நடைபெற்றது.
இந்நிகழ்சியில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூட்டங்குளம் அணு உலையின் முதல் உலை நாட்டின் சேவைக்காக அர்பணிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது "அணு சக்தி உருவாக்கவும், மின்சார பற்றாக்குறையை போக்கி தனித்தன்மையோடு தேசம் திகழ வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருந்தது. அந்த கனவு இன்றைய தினம் நிறைவேறியிருக்கிறது. ரஷியா உடனான நமது நட்பு வலுவானது. நம்முடைய நட்பின் அடையாளமாக இந்த கூடங்களம் அணு உலையை அர்பணிக்கிறோம்." என தெரிவித்தார்.
ரஷிய அதிபர் புடின் கூறும்போது "ரஷிய நாட்டின் நவீன் தொழில் நுட்பத்துடன் இந்த அணு உலை உருவாக்கப்பட்டுள்ளது மிகப்பெரும் சந்தோஷத்தை தருகிறது. இது வெறும் அணு உலை மாத்திரம் அல்ல, ரஷியாவின் திறமையை வெளி உலகிற்கு பறைசாற்றும் மாபெரும் சக்தியாகும். இதை இந்தியர்களோடு பகிர்ந்து கொள்வதை பெருமையாக கருதுகிறோம்" என்றார்.
சென்னையிலிருந்து பங்கெடுத்த தமிழ்க முதல்வர் ஜெயலலிதா கூறும்போது "ரஷியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான நீண்ட கால நட்புறவின் காரணமாகவே நான் இந்த அணு உலையை தமிழகத்தில் நிறுவுவதற்கு ஆதரவு அளித்தேன்" என தெரிவித்தார்.
இந்நிகழ்சியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தலைவர் எஸ்.கே சர்மா, ரஷியா நிறுவனத்தின் லிமாரீன்கோ ஆகியோரும் கலந்து கொண்டனர். முதல் அணு உலை அமைக்கும் பணி கடந்த ஜூலை 2013 நிறைவு பெற்றது. அன்று முதல் இன்று வரை 10,800 மில்லியன் யூனிட் தயாரிக்கப்பட்டுள்ளது. 1000 மெகாவாட் வரை உற்பத்தி செய்யும் இந்த அணு மின் நிலையம் ரஷிய விஞ்ஞானிகளின் உதவியோடு உருவாக்கப்பட்டது. இத்திட்டம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்திலேயே துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments