Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 13, 2016

அமெரிக்காவிற்கு எதற்காக போறீங்க...? - சிவசேனா கேள்வி



மும்பை: அமெரிக்காவில் நீங்கள் அவமதிக்கப்படுகிறீர்கள் என்று தெரிகிறதே! பிறகு ஏன் அங்கு மீண்டும் மீண்டும் சென்று அவமானப்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என சிவசேனா ஷாருக்கானை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.

சமீபத்தில் தான் அமெரிக்கா சென்ற போது அங்கு லாஸ் ஏஞஜல்ஸ் விமான நிலையத்தில் வெகு நேர நிற்கவைக்கப்பட்டு சோதனைக்குள்ளானதாகவும், இது போன்று நிகழ்வுகள் தமக்கு ஏற்படுவது என்பது புதிதல்ல, இருப்பினும் இது மனவேதனையை தருகிறது என ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இச்செய்தி காட்டுத்தீ போல் பரவத்துவங்கியது.

இனி இது போல் தவறுகள் நடக்காது, இச்சம்பவத்திற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என அமெரிக்கா தரப்பில் பகிரங்கமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "சாம்னா"வில் இவ்விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் நீங்கள் அவமானப்படுத்தப்படுகிறீர்கள் என்று தெரிகிறதே, பிறகு ஏன் அமெரிக்காவிற்கு மீண்டும் மீண்டும் சென்று கொண்டிருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளனர். உங்களை சோதித்தபோது இனி உங்கள் மண்ணில் காலடி எடுத்து வைக்கமாட்டேன் என உடனடியாக நாடு திரும்பியிருந்தால் அமெரிக்காவிற்கு சாட்டையால் அடித்தது போல இருந்திருக்கும். ஒவ்வொரு முறை நீங்கள் அமெரிக்கா சென்று வரும்போது அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது என தெரிவித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic