Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 9, 2016

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விரர் மேத்யூ ஹேடன்



முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன் மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கிரிக்கெட் சங்கத்தின்  ப்ரீமியர் லீக் தொடருக்கான புரமோஷனுக்காக மேத்யூ ஹேடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சென்னை வந்த அவர் அவ்விழாவினை முடித்துவிட்டு இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இன்று மீனாட்சி அம்மன் கோவில் சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார்.

இதன் பின்னர் தெப்பக்குளம் தியாகராஜர் கலூரிக்கு செல்லவிருக்கிறார். அங்கு மதியம் 3 மணி வரை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வேலம்மாள் கல்லூரிக்கும் செல்லவிருக்கிறார். இது தவிர மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) முதல் இரண்டு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக மேத்யூ ஹேடன் விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதிரடி ஆடக்காராரான மேத்யூவின் விளையாட்டை இந்திய ரசிகர்கள் பெரிதும் விரும்புவார்கள்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic