புதுடெல்லி:
குஜராத்தில் இறந்த பசுவின் தோலை உரித்த நான்கு தலித் இளைஞர்களை, பசு பாதுகாப்பு அமைப்பினர்! பொதுவெளியில் கட்டி வைத்து அடித்த சம்பவம் காரணமாக அங்கு தொடர்ச்சியான போராட்டம் நடந்துவருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பேசிய மத்திய மந்திரி வெங்கையா நாயுடு “சக மனிதனை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தும் யாரையும் இந்து என்று கூறமுடியாது. நீங்கள் பசு மீது மரியாதை வைத்துள்ளீர்கள் என்றால் அது நல்ல விஷயம்.
ஆனால் மற்ற மனிதர்களுக்கு வாழ்வதற்கான உரிமையும், தங்களின் வேலையை செய்வதற்கும் உரிமை உள்ளது. ஆனால் பசுவை காரணமாக காட்டி யாரையும் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது முற்றிலும் தவறு.
ஒடுக்கப்படுபவர்கள் மதம் மாறுவது பிரச்சனைக்கு தீர்வு கிடையாது. மதம் மாறியவர்கள் இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக மீண்டும் பழைய மதத்திற்கு திரும்புகிறார்கள்” என தெரிவித்தார்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments