ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில், வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெரும் கவுரவத்தை ஏற்படுத்திய சிந்துவுக்கு கோடிக்கணக்கில் ரொக்கமும், சொகுசு கார்களும் பரிசாக குவிகின்றன.
ஆந்திராவும். தெலங்கானாவும் போட்டி போட்டு கோடிகளை அறிவித்துள்ளன. பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில், இந்திய வீராங்கனை சிந்து ஆரம்பம் முதல் மிக அற்புதமாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினார். அவர் தங்கம் பதக்கம் பெற வேண்டும் என நாடே பிரார்த்தனை செய்தது. கிரிக்கெட் போட்டியை மட்டுமே ஆர்வமாக பார்த்து வந்த இந்திய ரசிகர்கள் முதல்முறையாக, ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியையும் மிக ஆர்வத்துடன் பார்த்தனர்.
நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில் உலகின் நம்பர்-1 வீராங்கனை ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினிடம் கடுமையாக போராடினார். முதல் செட்டின் மரினாவை வீழ்த்திய சிந்துவால் அடுத்த இரண்டு செட்களில் மரினை வீழ்த்த முடியவில்லை. அதனால் சிந்துக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெறும் முதல் இந்திய வீராங்கனை சிந்து என்பதால், அவருக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன. சிந்து தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் அவருக்கு அந்த மாநில அரசு முதலில் ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவித்தது.
டெல்லி மாநில அரசு சிந்துவுக்கு ரூ. 2 கோடியும், மகளிர் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷிக்கும் ரூ.1 கோடியும் பரிசு அறிவித்தது.அடுத்ததாக ஆந்திர அரசு சிந்துவுக்கு ரூ.3 கோடி பரிசும், தலைநகர் அமராவதியில் 1000 சதுர அடி வீட்டு மனையும், குருப்-1 பிரிவில் விரும்பும் பதவியில் அரசு வேலையில் சேரலாம் என்றும் அறிவித்தது. சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கும் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதற்கு போட்டியாக தெலங்கானா அரசு, சிந்துவுக்கு பரிசுத் தொகையை ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தியது. இது தவிர ஐதராபாத், விஜயவாடா,விசாகாபட்டினத்தில் உள்ள கார்பரேட் நிறுவனங்களும், நகைக்கடைகளும் சிந்து ரொக்கமும், பரிசுப் பொருட்களும் வழங்க போட்டி போடுகின்றன. ஐதராபாத் மாவட்ட பேட்மின்டன் சங்க தலைவர் சாமுண்டேஸ்வரநாத் சிந்துக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கவுள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா நேவாலுக்கு ஏற்கனவே பிஎம்டபிள்யூ கார் வழங்கியவர். மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் தனது பிரபல எஸ்.யு.வி சொகுசு காரை சிந்துவுக்கு பரிசாக வழங்க முன்வந்துள்ளது.
இந்திய பேட்மின்டன் சங்கமும் சிந்துக்கு ₹50 லட்சமும், கோபிசந்துக்கு 50 லட்சமும் பரிசு அறிவித்துள்ளது. மத்திய பிரசேத அரசு சிந்துவுக்கு 50 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. விஜயவாடாவை சேர்ந்த முன்னணி நகைக்கடை ஒன்று சிந்துவை தனது நிறுவனத்தின் தூதராக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது. ரியல் எஸ்டேட் அதிபர்கர்கள் பலரும் சிந்துவுக்கு பிளாட்களை வழங்க முன்வந்துள்ளனர். சிந்துக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளும்

No comments:
Write comments