பசுக்களை பாதுகாக்க தேவைப்பட்டால் இராணுவத்தை கூட அனுப்புவதற்கு தயாரக இருக்க வேண்டுமென பஜ்ரங்தள் அமைப்பின் தலைவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத்தில் உள்ள உனாவில் பசுமாட்டின் தோலை உரித்ததற்காக தலித் இளைஞர்கள் மீது ‘பசு காவலர்கள்’ கொடூர தாக்குதல் நடத்தினர். இது நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரமதர் மோடி கடந்த வாரம் தெலங்கானாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, ‘‘தலித் மக்களை தாக்க நினைப்பவர்கள் என்னை கொல்லட்டும். பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் செயல்படுகின்றனர். அவர்கள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என ஆவேசமாக கூறியிருந்தார்.
இதன்பின், கடந்த 9ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டம் ஒழுங்குக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் அடிக்கடி சர்ச்சயை ஏற்படுத்தும் பஜ்ரங்தள் அமைப்பாளர் ஷரண் பம்ப்வெல், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘கர்நாடகாவில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பசுக்கள் கொல்லப்படுகின்றன. நூற்றுக்கணக்கான பசுக்கள் திருடப்பட்டு கடத்தப்படுகின்றன.
இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை தடுக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டப்படி உரிமை உள்ளது. ஆனால், குடிமக்கள் இதில் ஈடுபடக் கூடாது என்று கூறி விட்டதால் காவல் துறையினர்தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். கர்நாடகா காவல்துறையில் ஆள் பற்றாக்குறை இருப்பதால் பசுக்களை பாதுகாக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு இராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். இந்த கடிதத்தை அவர் வெளியிட்டதால் கர்நாடகாவில் மீண்டும் சர்ச்சை வெடித்திருக்கிறது.

No comments:
Write comments