Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 8, 2016

துருக்கியில் ஜனநாயகத்தின் வெற்றியை கொண்டாடிய மக்கள்


துருக்கியில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முறை தோல்வியடைந்ததை அடுத்து அதனை கொண்டாடும் விதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினர் ஒன்றாக சேர்ந்து இஸ்தான்புல்லில் மாபெரும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி எர்துகான், ஆளும் கட்சி பிரதமர் பினாளி இல்டிரிம், துருக்கியின் முக்கிய எதிர்கட்சியான மக்கள் குடியரசுக் கட்சியின் தலைவர் கெமால் கிளிக்டரோக்லு மற்றும் முக்கிய கட்சிகள் இணைந்து கலந்து கொண்டனர். ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் போது உயிரிழந்த 240 பேர் மற்றும் காயமுற்ற 2200 பேர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜனநாயகம் மற்றும் உயிர் தியாகிகளின் பேரணி நடத்தப்பட்டது.

மெளன அஞ்சலியுடன் துருக்கிய தேசிய கீதம் மற்றும் குரான் ஓதி இந்த பேரணி துவங்கப்பட்டது. வழிபாட்டு அலுவல்கள் தலைவர் குரான் ஓதினார். ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை முறித்த படையில் ஒருவரான ஒர்குன் செகர்கயொக்லு , “நம் பக்கம் நம்பிக்கை இருந்தது. எனது தோழர்கள் இடப்புறமும் வலப்புறமும் சுடப்பட்டார்கள். ஆனால் நாங்கள் முன்னேறிக் கொண்டே இருந்தோம்.” என்று கூறினார். இவர் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முரியடிக்கையில் தனது ஒரு காலை இழந்தவர். ஜூலை 15 ஆம் நாளை முதல் உலக்கபோரின் கல்லிபோலி யுத்தத்தோடு ஒப்பிட்டு பேசிய அவர் “இது சுதந்திரத்திற்கான புதிய போராட்டம்” என்று கூறியுள்ளார்.

MHP கட்சித் தலைவர் தேவ்லேட் பஹ்கெளி, நான் துருக்கியை பெருமையில் மிளிர்வதை கண்டேன். இங்கு நம்பிக்கை இருக்கிறது, இங்கு மன உறுதி உள்ளது.” என்று கூறியுள்ளார். மேலும் அவர், இங்கிருந்து ஒரு புதிய பயணம் துவங்குகிறது என்று கூறியுள்ளார்.

பிரதமர் பினாளி இல்டிரிம் உரையாற்றுகையில், “இந்த தேசத்தை ராணுவ சீருடையில் மறைந்து கொண்டு ஆக்கிரமிக்கப் பார்த்த்தார்கள், தேசத்தின் உறுதியை திருடப்பார்த்தார்கள்” என்றும் “நம்மை கொல்லாத எந்த ஒரு சதி திட்டமும் நம்மை இன்னும் உறுதி படுத்தும்” என்று கூறினார். மேலும் முக்கிய எதிர்கட்சிகளின் ஆதரவிற்கான அவர்களை புகழ்ந்தார்.

எர்துகான் மக்களிடம் உரையாற்றுகையில், “ஜூலை மாதம் 16 ஆம் தேதி எவ்வாறு நம் எதிரிகளின் மன நிம்மதி கெடுபட்டதோ அதே போன்று இன்றும் அவர்களது மனம் நிம்மதி கெட்டுள்ளது. அன்று இரவு மக்கள் ராணுவ சதியை முறியடிக்க தங்கள் உயிர்களை பணயம் வைத்தனர். தெருக்களை நிரப்பினர். வரலாறு நமது இரத்த சாட்சியங்களின் பெயர்களை பொன் எழுத்துக்களில் பொறித்து வைக்கும்” என்று கூறினார்.

ராணுவ சதியை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது குறித்து கருத்து தெரிவிக்கையில், அதனை தான் பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கின்றேன் என்று எர்துகான் கூறியுள்ளார். “மரண தண்டனையை முடிவு செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு இருகின்றது. இது குறித்து பாராளுமன்றம் ஒரு முடிவு செய்த பின்னர் நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும். பாராளுமன்றம் மரண தண்டனையை அங்கீகரித்தால் நானும் அதனை அங்கீகரிப்பேன் என்று கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கட்சிக் கொடிகள் மற்றும் பதாகைகள் தடை செய்யப்பட்டிருந்தது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic