Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 9, 2016

பிரபல சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்!


மூத்த‌ திரைப்பட தயாரிப்பாளரும், கதாசிரியருமான பஞ்சு அருணாச்சலம் உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.


சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. பஞ்சு அருணாச்சலம், அன்னக்கிளி, உல்லாச பறவைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். கவிஞர் கண்ணதாசனின் உறவினரான பஞ்சு அருணாச்சலம் அவரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதன் காரணமாக திரையுலகிற்கு பல அர்த்தமுள்ள பாடல்களை எழுதியுள்ளார்.

ஏ.எல்.எஸ் ஸ்டூடியோவில் செட் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து தனது திரையுலக பயணத்தை தொடங்கிய பஞ்சு அருணாச்சலம், பாடலாசிரியரகவும், கதாசிரியராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், தமிழ் திரையுலகில் நீங்கா இடம்பிடித்த பன்முகத் திறன் கொண்ட ஜாம்பவானாக திகழந்தவர்.

இசைஞானி இளையராஜா உட்பட பல பிரபலங்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரைச் சேரும். திரையுலகினர் பலரும் பஞ்சு அருணாச்சலத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பஞ்சு அருணாச்சலத்தின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பு என அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic