ஜலந்தரின் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஜகதீஷ் கஜ்னஜாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு, பஞ்சாப் மாநில முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவராக செயல்பட்டுவந்த ஜகதீஷ் கஜ்னஜாவை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். ஆழமான காயமடைந்திர்பதால் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜகதீஷின் உடலை மூன்று துப்பாக்கி குண்டுகள் துளைத்திருக்கிறது. இதனை அம்மாநில பா.ஜ.கவின் எம்.எல்.ஏ மனோரஞ்ஜன் காலியா பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங், இந்த தாக்குதலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். "பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அமைதி நிலமையை சீர்குழைப்பதற்காக சமூக விரோதிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது" என அவர் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் தங்களது கொள்கைகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. அதற்காக இது போன்று வன்முறையில் ஈடுபடுபவர்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments