Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 7, 2016

குஜராத்தின் புதிய முதலமைச்சர் விஜய் ரூபானி இன்று பதவியேற்றார்


குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பா.ஜ.கவின் மாநில தலைவர் விஜய் ரூபாணி இன்று பதவி ஏற்கவுள்ளார். முறைப்படி நேற்றைய தினம் அளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

குஜராத் முதலமைச்சராக செயல்பட்டுவந்த ஆனந்திபென் படேல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதலமைச்சரை நியமிப்பதில் பா.ஜ.கவின் தேசிய தலைமையில் சிக்கல் ஏற்பட்டது. கட்சியின் தேசிய தலைவராக இருக்கக்கூடிய அமித்ஷாவும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவரே முதல்வராக நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியானது. ஆயினும் கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்த பா.ஜ.கவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறும்போது "அமித்ஷா கட்சியின் தேசிய தலைவராக தொடர்ந்து செயல்படுவார். அவரை குஜராத்தின் முதலமைச்சராக மாற்றுவதற்கான எந்த திட்டமும் இல்லை, இருப்பினும் யாரை அடுத்த முதல்வராக அறிவிப்பது என்பது குறித்து கூடிய விரைவில் அறிவிக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.

தற்போது குஜராத் மாநில பா.ஜ.க தலைவராக செயல்பட்டுவரும் விஜய் ரூபாணியை பா.ஜ.க தலைமை முதலமைச்சராக நியமித்துள்ளது. அவர் இன்று பிற்பகல் பதவிஏற்பார் என்று கூறப்படுகிறது. ஆனந்தி படேல் தனக்கு பிறகு நிதின் படேலை முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என கட்சியின் தலைமைக்கு கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அமித்ஷா விஜய் ரூபாணிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இருப்பினும் நிதின் பட்டேல் துணை முதலமைச்சராக பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் படேல் சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டி நடத்திய போராட்டங்கள், சமீபத்தில் உனா மாவட்டத்தில் மாட்டிறைச்சிக்காக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் என தொடர்ந்து குஜராத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

படேல் சமூகம் பா.ஜ.கவின் மிகப்பெரிய ஓட்டு வங்கி என்பதால், அச்சமூகத்தை சேர்ந்த நிதின் படேலை முதலமைச்சராக நியமிப்பதின் மூலம் அச்சமூகம் அரசின் மீது கொண்டிருந்த கோபத்தை தனிக்கலாம் என்பதற்காகவே நிதின் படேல் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக ஆனந்தி படேல் தரப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆளுனரை விஜய் ரூபாணி சந்தித்து ஆட்சி அமைக்க கோரும்போது ஆனந்திபென் படேல் உடன் செல்லவில்லை. இது தொடர்பாக குஜராத் பா.ஜ.க பொறுபாளர் தினேஷ் சர்மாவிடம் கேட்டபோது "யார் பதவி ஏற்கப்போகிறார்களோ அவர்கள் இங்கு இருக்கிறார்கள்" என ஒற்றை வரியில் தெரிவித்துவிட்டார்.

 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic