பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவின் ஒருபகுதியாகும் என்று பாரதீய ஜனதா எம்.பி. யோகி ஆதித்யானாத் தெரிவித்துள்ளார்.
ராஸ்ரா பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற பா.ஜ.க நிகழ்ச்சியில் கலந்துக் கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யானாத், இந்தியா பலுசிஸ்தான் மாகாண மக்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்று கூறிய விவகாரத்திற்கு பதிலடி கொடுத்த யோகி ஆதித்யானாத், அவருடைய கட்சியின் மதிப்பை இதுகாட்டுகிறது என்றார். காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரஸ்தான் பொறுப்பு. கஷ்மீர் விவகாரத்தில் பொறுப்பு நேருவிற்கு பதிலாக, சர்தார் வல்லபாய் படேலுக்கு வழங்கப்பட்டு இருந்தால் இப்பிரச்சனையே எழுந்து இருக்காது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஷ்மீர் சுதந்திரம் பெறும் நேரம் வந்துவிட்டது, விரைவில் இந்தியாவுடன் இணையும் என்று யோகி ஆதித்யானாத் கூறிஉள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத், காஷ்மீருக்கு ராணுவத்தை அனுப்பவேண்டும் என்று அந்நாட்டு அரசை வலியுறுத்தினான். இதுகுறித்து யோகி ஆதித்யானாத் இதுவரையில் பாகிஸ்தான் பெற்ற தோல்வியை சுட்டிக்காட்டினார். இந்தியாவுடன் போரிட பாகிஸ்தானுக்கு தைரியம் இருந்தால், பெரும் விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுடன் இணையும் என்றார்.

No comments:
Write comments