Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 19, 2016

ராஜஸ்தானில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி...

 
 
உளவு பார்ப்பதற்காக, இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்த நந்தலால் மகாராஜ் என்பவரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் என்ற எல்லையோரப் பகுதியில் சில நாட்கள் முன்பாக ஊடுருவிய நந்தலால் மகாராஜ், அங்குள்ள கிராம மக்களிடம் இந்திய பாதுகாப்புப் படையின் செயல்பாடுகள் குறித்தும், அப்பகுதியில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்தும் தகவல் திரட்டியுள்ளார். இதற்காக, உள்ளூர் மக்களுக்கு, அவர் ஏராளமான பணமும் கொடுத்துள்ளார். இதையடுத்து, சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன்பேரில் ஜெய்சால்மரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த நந்தலாலை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான கரன்சிகள், போலி பாஸ்போர்ட் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தானின் முனாபோ என்ற இடத்தில் இருந்து, ஜெய்சால்மர் பகுதிக்குள் ஊடுருவிய நந்தலால், அப்பகுதியில் தீவிரவாத தாக்குதல் நடத்தும் விதமாக, தகவல் திரட்டியுள்ளார். இதற்காக, ஜெய்சால்மரை சுற்றிலும் இந்திய பாதுகாப்புப் படைகளின் செயல்பாடு, அப்பகுதியின் விவரங்களை புகைப்படங்களாகவும் ஆவணப்படுத்தியுள்ளார். அவற்றையும் பறிமுதல் செய்த போலீசார், தொடர் விசாரணை நடத்தி வருவதாக, தெரிவித்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic