ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பீச் வாலிபால் போட்டியில் பிகினி உடை அல்லாது பர்தாவை அணிந்து கூட விளையாடலாம் என எகிப்து நாட்டு வீராங்கனைகள் காண்பித்தனர். இது பெரும் கலாச்சார மோதலை ஏற்படுத்தியுள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜெர்மனி மற்றும் எகிப்து நாடுகளிக்கிடையே பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீராங்கனைகள் பிகினி உடையுடன் களம் இறங்க எகிப்து அணி வீராங்கனைகள் முழு பர்தாவுடன் களத்தில் இறங்கினர். இதை ஒரு கலாச்சார மோதல் என்பதா? அல்லது கலாச்சார வேறுபாடுகளை ஒலிம்பிக் இணைந்தது என்பதா? என்று தெரியவில்லை.
இத்துனை காலமாக பீச் வாலிபால் போட்டிகளை பொறுத்தவரை விளையாட்டை விட அதில் விளையாடும் வீராங்கனைகளின் ஆடை குறைப்பு விவகாரத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தப்பட்டு வந்தது. 2012 ஒலிம்பிக் போட்டி வரை பீச் வாலிபால் விளையாட்டில் அதிகபட்சமாக 7 செ.மீ வரை நீளத்தில் தான் ஆடைகள் அணிய வேண்டும். இது உள்ளாடை போன்ற அளவு தான். ஆனால் இதனை ஆஸ்திரேலியா விளையாட்டு ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது. பெண்களை கவர்ச்சியாக காட்டுவதில் ஒலிம்பிக் நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அதன் பிறகு பீச் வாலிபால் விளையாட்டில் வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஆடை கட்டுப்பாடுகள் தளர்தப்பட்டது. இருந்தாலும் பெரும்பாலான வீராங்கனைகள் குறைந்த அளவு ஆடையுடனே விளையாடி வந்தனர். ஆனால் முழுக்க பர்தா போன்று வாலிபால் ஆட எகிப்து வீராங்கனைகள் கோரிக்கை வைத்ததால், அதனை ஒலிம்பிக் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. இதனை கலாச்சார மோதல் என விளையாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தற்போது சமூக வலைதளங்களிலும் பெரும் சர்ச்சையாகி வருகிறது.

No comments:
Write comments