Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 22, 2016

உலக நாயகனுக்கு குவியும் பாராட்டுக்கள்!


செவாலியே விருது பெறப்போகின்ற நடிகர் கமல்ஹாசனுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டு மழைகள் குவிந்த வண்ணம் உள்ளது.

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான "செவாலியே' விருது வழங்கப்படும் என்று அந்த நாட்டின் கலாசார அமைச்சகம் அறிவித்துள்ளது.

உலகின் பல பகுதிகளில் செயல்பட்டு வரும் முன்னோடி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரான்ஸ் அரசு 1957-ஆம் ஆண்டு முதல் செவாலியே விருதை வழங்கி வருகிறது.

நடிகர் கமல்ஹாசனுக்கு அவரின் கலை சேவையைப் பாராட்டி செவாலியே விருது அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் ரஜினி தெரிவித்ததாவது, எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic