Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 3, 2016

'இந்தியா - வியட்நாம்' 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

 

பிரதமர் நரேந்திர மோடி வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மோடி தனது பயணத்தின் முதற்கட்டமாக நேற்று வியட்நாம் சென்றார். வியட்நாம் தலைநகர் ஹனோய்க்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வியட்நாமில் அவர் முதன்முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று வியட்நாம் பிரதமர் நிகுயென் ஜியுன் புக்கை மோடி சந்தித்தார். அப்போது இந்தியா - வியட்நாம் இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் சார்ந்த 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. வியட்நாம் பிரதமர் நிகுயென் ஜியென் புக் உடனான சந்திப்புக்குப் பிறகு அதிபர் திரன் தாய் குவாங் உடன் விரிவான ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து வியட்நாம் நாட்டின் முக்கிய தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். முன்னதாக வியட்நாம் - ஹானோயில் தியாகிகள் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic