தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எதிராக 1,2௦௦க்கும் மேற்பட்ட புகார்கள் மத்திய அரசிடம் குவிந்துள்ளன. இந்திய திரைப்படங்களில் வன்முறைகளும் ஆபாசமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நாட்டில் குற்றச்சம்பவங்கள் பெருகி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே தணிக்கை விதியை கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பல புகார்கள் வந்துள்ளது.
இதையடுத்து சின்னத்திரை தொடர்கள் மீதும் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. குழந்தைகளுக்கு எதிரானவை, வன்முறை, பெண்களைத் தவறுதலாக காட்டுதல், ஆபாசம் போன்றவைகளுக்கு அந்தப் புகாரில் நடவடிக்கை எடுக்க கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது மக்களிடையே மூட நம்பிக்கையை வளர்க்கும் வகையில் மந்திர தந்திரங்கள், பேய், பில்லி சூனியம், பாம்பு கதைகள் போன்ற தொடர்கள் அதிகமாக தொலைக்காட்சிகளில் இடம் பெற்று வருகின்றன என்பது குறித்தும் மத்திய அரசிடம் ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன.
இதுபற்றி அரசுக்கு 1,800 புகார்கள் வந்தன. இதில் 1,25௦ புகார்கள் மூடநம்பிக்கை தொடர்பானவை என்று கூறப்படுகிறது. எனவே, இந்தப் புகார்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒளிபரப்பு புகார்கள் கவுன்சிலுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் அனுப்பியுள்ளது. தமிழில் பைரவி, நாகினி உள்ளிட்ட தொடர்கள் மீது அரசுக்கு புகார்கள் வந்துள்ளது. ஜி சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மீதே அதிக புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments