சமீபகாலமாக வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை குறிவைத்தே பெரும்பாலான கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. 2015இல் முதியவர்களுக்குப் பாதுகாப்பற்ற நகரமாக தொடர்ந்து இரண்டாவது முறையாக டெல்லி இருந்து வருகிறது. தேசிய குற்றப்பதிவு (NCRB) ‘இந்தியாவில் கிரைம்’ என்ற சமீபத்திய அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
100,000 முதியவர்களுக்கு 108.8 குற்றங்கள் விகிதம், நாட்டில் உள்ள மற்ற நகரங்கள் அனைத்தையும் ஒப்பிடும்போது தலைநகரான டெல்லியில் முதியவர்கள் ஐந்து மடங்கு குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய குற்றங்கள் தேசிய அளவில் 20 சதவிகிதமாக உள்ளது.
இந்த வகையில், மத்தியப்பிரதேசம் 60.5% (3,456 வழக்குகள்), சத்தீஸ்கர் 53.7% (1,077 வழக்குகள்) மற்றும் ஆந்திரப் பிரதேசம் 51.6% (2,495 வழக்குகள்) என தொடர்ந்து வருகிறது.
நாட்டின் தலைநகரில் வசிக்கும் பெரும்பாலான முதியவர்கள் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அவை, கொள்ளை வழக்குகள் (145 ) ஏமாற்று வழக்குகள் (123), கொலை வழக்குகள் (14), கொடூர தாக்குதல் வழக்குகள் (9), மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் (3), கொலை முயற்சி வழக்குகள் (2), மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ய முயற்சித்தல் வழக்குகள் (2), கற்பழிப்பு வழக்கு (1), வழிப்பறி வழக்குகள் (2) மற்றும் அதிகபட்சமாக 947 மற்ற இபிகோ (இந்திய தண்டனைச் சட்டம்) குற்றங்கள்.
கடந்த 2015ஆம் ஆண்டு எண்ணிக்கை அடிப்படையில், டெல்லியில் மொத்தமாக 1,248 முதியவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில், முதியவர்களுக்கு எதிரான குற்ற விகிதம் 2014இல் 89 குற்றங்களாக இருந்துள்ளன. அதனை ஒப்பிடும்போது 100,000 முதியவர்களுக்கு ஒன்றுக்கு 19.8 குற்றவிகிதம் என உயர்ந்துள்ளது. தேசிய குற்றப்பதிவு தான் முதன்முதலாக, முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான தகவல்களைக் கணக்கிட்டு 2014இல் வெளியிட்டது.
இந்த வழக்குகளை ஒப்பிடும்போது, 2015இல் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட நபர்களில் மூன்றில் ஒருவர் முதியவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களாக இருந்தனர். மேலும், இந்த குற்றவாளிகள் அனைவரும் ஆண்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு எதிராக நகரில் அதிகரித்து வரும் குற்ற விகிதம் பற்றி காவல்துறையின் சிறப்புப் ஆணையாளர் (குற்றம்) தாஜ் ஹாசனிடம் கேட்கப்பட்டது.
இதுகுறித்து அவர், “நாங்கள் ஒவ்வொரு வழக்கையும் பதிவு செய்ய வேண்டும் என்று 2014ஆம் ஆண்டு முதல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறோம். இருந்தும் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு 2015ஆம் ஆண்டு குற்றவிகிதம் மிகவும் அதிகரித்திருக்கிறது. எனவே, நாங்கள் ஒவ்வொரு குற்றத்தையும் கண்டறிந்து, அதை சரியாக பதிவு செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்
ஜுன் 20, 2004ஆம் ஆண்டு முதியவர்களுக்கான ‘முதியவர்கள் பாதுகாப்பு செல்’ போலீஸ் தலைமையகம் அளவில் உருவாக்கப்பட்டதால் டெல்லி போலீஸார் முதியவர்களுடைய பாதுகாப்பு விஷயத்தை மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இப்போது ‘முதியவர்கள் பாதுகாப்பு செல்’ டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.
முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, தொலைபேசி மூலம் உரையாடி அவர்களின் பிரச்னைகள் பதிவு செய்யப்படும். ரோந்து அதிகாரிகள் உதவியுடன் முதியவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். மேலும், அவர்கள் பிரச்னையில் இருக்கும்போது எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ள அவர்களுக்கு என குறிப்பிட்ட அவசர உதவி எண் 1291 இருக்கிறது. இது தவிர, ரோந்து அதிகாரிகள் மாதத்துக்கு இருமுறை அவர்களை வீட்டுக்குச் சென்று சந்தித்து வருகின்றனர்.
தேசிய குற்றப்பதிவு அளித்துள்ள தகவல்படி, முதியவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2014இல் 18,714 ஆக பதிவாகியுள்ளது. அதை ஒப்பிடும்போது 2015இல் இந்தியா முழுவதும் மொத்தமாக 20,532 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 1,867 ஏமாற்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொள்ளை (1,294), கொலை (1,053), கொடூர தாக்குதல் (949), கொலை முயற்சி (456), மிரட்டி பணம் பறித்தல் (94), மரணம் விளைவிக்காத வகையில் செய்யும் குற்றச் செயல் (78), கற்பழிப்பு (58), மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ய முயற்சி (50), வழிப்பறி (47), கொலை செய்து வழிபறி (2), ஆசிட் தாக்குதல் (1). மேலும், பிற குற்றங்கள் 45. மொத்தமாக 14,586 வழக்குகள் மற்ற இபிகோ குற்றப் பிரிவில் உள்ளன.
2007ஆம் ஆண்டின் மூத்த குடிமக்கள் நலன்கள் மற்றும் பராமரிப்புச் சட்டப்படி 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுவார்கள் என தேசிய குற்றப்பதிவு, ஆகஸ்ட் 30ஆம் தேதி தகவல் வெளியிட்டுள்ளது.
source ; newsminute

No comments:
Write comments