இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் (எல்.ஐ.சி.) ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தை காப்பீட்டு வாரமாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி சென்னை எல்.ஐ.சி. கட்டடத்தில் நடந்த காப்பீட்டு வார விழாவை தொடங்கி வைத்து மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் கூறுகையில், ‘‘தென் மண்டலம் எப்போதுமே வணிகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை என இரண்டிலும் அகில இந்திய அளவில் முக்கியமான இடத்தில் உள்ளது. பாலிசி எண்ணிக்கை அடிப்படையில் 78 சதவிகிதமும் மற்றும் புது பிரீமிய வருவாய் அடிப்படையில் 73 சதவிகித பங்களிப்பையும் பெற்றுள்ளது. தென்மண்டலத்தில் 14,500 ஊழியர்களும், ஒரு லட்சத்து 18 ஆயிரம் முகவர்களும் பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டு 20 லட்சத்து 29 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் ரூ.2,660கோடிக்கு அதிகமாக பிரீமியம் பெறப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகம் தனது அறுபதாண்டு வைரவிழாவை கடந்த 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2017) ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கொண்டாட தொடங்கி உள்ளது.

No comments:
Write comments