Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 3, 2016

பிரதமர் வியட்நாம் பயணம் - 12 ஒப்பந்தங்களில் கையெழுத்து!


வியட்நாமுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுடன் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

இருநாட்டு மற்றும் பலதரப்பு ராஜ்ஜிய உறவுகளைப் பலப்படுத்த, கிழக்கு நோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி முதலில் வியட்நாமுக்குச் சென்றார். சனிக்கிழமை வியட்நாம் சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமர் குயன் சுவான் புக் மற்றும் முக்கிய தலைவர்களுடன் பல துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில் பாதுகாப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், இரட்டை வரிவிதிப்பு முறை உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, "வியட்நாம் பிரதமர் புக்குடனான எனது ஆலோசனை ஆக்கபூர்வமாக அமைந்தது. இருநாடுகளுக்கும் இடையே, பொருளாதார உறவை வலுப்படுத்த உறுதி எடுத்துள்ளோம்.

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக வியட்நாமுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா நிதியுதவியாக வழங்கும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியட்நாமில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு இந்தியா 5 மில்லியன் அமரிக்க டாலர் உதவியாக வழங்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

கடந்த 15 ஆண்டுகளில் வியட்நாமுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது கவனிக்கத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic