காஷ்மீர் ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு ஜனாதிபதியையும் சந்தித்து பேசினார்.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் உரி நகரில் இந்திய ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. பல படைப்பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் தங்கியிருக்கும் இந்த முகாமில் 4 பயங்கரவாதிகள் நேற்றுமுன்தினம் அதிகாலையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் நுழைந்தனர்.
அங்கு வீரர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது வெடிகுண்டுகளை வீசிய அவர்கள், கண்ணில் பட்ட வீரர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டும் வீழ்த்தினர். இதனால் ராணுவ முகாம் போர்க்களமானது. இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே சுமார் 5 மணி நேரம் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குண்டு வெடித்ததால் தீப்பிடித்த கூடாரங்களில் சிக்கியும், பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு இரையாகியும் 17 வீரர்கள் நேற்று முன்தினம் இறந்தனர். 25–க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்து அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 வீரர்கள் நேற்று உயிரிழந்தனர்.
ராணுவம் மீது சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய இந்த தாக்குதல் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என ராணுவ அதிகாரிகளும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 4 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஆயுதங்களும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. எனவே இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை மத்திய அரசு குற்றம் சாட்டியது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சிறந்த பயிற்சி பெற்று, பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளனர் என்று கூறிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார். ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கரும் இதே கருத்தை கூறினார்.
தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது தொடர்பாக மேலும் அதிக ஆதாரங்கள் தேவையில்லை என்று கூறிய ராணுவ இணை மந்திரி சுபாஷ் பாம்ரே, இதுதொடர்பாக பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.
இந்தநிலையில் காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயர்மட்டக்குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், நிதி மந்திரி அருண் ஜெட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவ தளபதி தல்பீர் சிங் சுகாக் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.
இந்த கூட்டம் முடிவடைந்த சில மணி நேரங்களில், பிரதமர் மோடி, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது, உரியில் நடந்த தாக்குதல் பற்றிய விவரங்களை எடுத்துக் கூறினார்.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும் அவர் கருத்து பரிமாற்றம் நடத்தி இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ராணுவ முகாம் தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டிக்காமல் விடமாட்டோம் என பிரதமர் மோடி ஏற்கனவே உறுதியளித்து இருந்த நிலையில், சில அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்தவகையில் தற்போதைய சூழலுக்கு சாதகமான சில நடவடிக்கைகளை பாதுகாப்பு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதில் முதல் நடவடிக்கையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தலாம் என அவர்கள் கூறினார்கள். ஆனால் இந்த நடவடிக்கை தங்களது கையை மீறி சென்றால், தாக்குதல் நீடிக்கக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.
எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டை தாண்டாமல் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவது. இந்த திட்டப்படி பாகிஸ்தான் ராணுவத்தின் நகர்வை கவனித்து அவர்களது ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள் உள்ளிட்ட தளங்கள் மீது பீரங்கிகளால் தாக்குதல் நடத்த வேண்டும். இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுத்தாலும், அதை சமாளிக்க முடியும்.
இந்த தாக்குதலின் போது தொலைதூர ராணுவ நிலைகளை தாக்க ‘ஸ்மெர்ச்’ ஏவுகணைகள் அல்லது 290 கி.மீ. தொலைவு வரை தாக்க வல்ல பிரமோஸ் ஏவுகணைகளை களமிறக்கலாம். அத்துடன், மிராஜ்–2000, ஜாகுவார், சுகோய் விமானங்கள் மூலம் லேசர் குண்டுகள் அல்லது கொத்து குண்டுகளை வீசலாம்.
ஆனால் இந்த நடவடிக்கைகளை மிகுந்த கவனமுடனே மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் பாகிஸ்தானின் வான் தாக்குதல் தடுப்பு கருவிகள் அனைத்தும் இந்தியாவை நோக்கியே அமைக்கப்பட்டு உள்ளதால், விமானப்படைக்கு சிறிது சிக்கலையும் விளைவிக்கக்கூடும்.
அடுத்ததாக கடந்த 2001–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தாக்குதலை தொடர்ந்து, அப்போதைய வாஜ்பாய் அரசு படைகளை பாகிஸ்தான் எல்லையை நோக்கி குவித்தது போல ‘ஆபரேஷன் பராக்கிரம்–2’–ஐ மேற்கொள்ளலாம். எனினும் இந்த நடவடிக்கை நீண்ட காலத்துக்கு அதிக பயனை தராது எனவும் பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

No comments:
Write comments