Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 20, 2016

கட்டிடங்கள் இருக்கும்போது வீரர்களை முகாம்களில் தங்கவைத்தது ஏன்..?


உரி தாக்குதல் சம்பவத்தில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் சுமத்தி உள்ளது. 

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்திய எல்லைகளும், தேசிய பாதுகாப்பும் கடந்த 2 ஆண்டாக முற்றுகைக்கு ஆளாகி உள்ளன. இதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் மனோகர் பாரிக்கர்தான் பொறுப்பேற்க வேண்டும். உரி தாக்குதலை தடுக்க தவறிய பாரிக்கர் உட்பட பாதுகாப்பு துறையினர் மீது மோடி நடவடிக்கை எடுத்து தனது வீரத்தை காட்டுவாரா? உளவுத் துறை தோல்வி அடைந்து விட்டதை ஒப்புக் கொள்வாரா?

பூஞ்ச்சில் தாக்குதல் நடந்த பிறகும், நாம் முன்னெச்சரிக்கையாக தயாராக இருக்கவில்லை ஏன்? வெளியுறவு கொள்கையில் அமைச்சர் சுஷ்மா முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டார். இப்படி ஒட்டுமொத்த சீர்கேட்டுக்கு பிரதமர் மோடி மட்டுமே முழு பொறுப்பாவார். வீரர்களின் நடவடிக்கையும், இடமாற்றமும் கசிந்தது எப்படி என்பதை மோடி அரசு விளக்க வேண்டும். மேலும், 2 காலி கட்டிடங்கள் இருக்கும்போது, வீரர்கள் எதற்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள்? இதுதான் மோடி அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை. இனியாவது சர்வதேச சமூகத்தை ஒன்று திரட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும்.  இவ்வாறு கூறி உள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic