Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 27, 2016

சவுதி இளவரசர் மற்றும் மந்திரிகளின் சம்பளம் 20% குறைப்பு! - மன்னர் அதிரடி!

20% of the govt officials salary will be deducted

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்  கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் வேலையில் சவுதி அரேபியாவில் அரசாங்க வேலையில் இருக்கும் மூத்த ஊழியர்களின் சம்பளத்தில் 20% குறைக்கப்படுவதாக சவுதி மன்னர் சல்மான் அதிரடி உத்தரவை பிறபித்துள்ளார்.

நேற்றைய தினம் சவுதி மன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அரசு பணிகளில் ஈடுபட்டு வரும்  உள்துறை அமைச்சர் முகமது பின் நாயிப், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது பின் சல்மான் உட்பட பல அமைச்சர்களின் சம்பளம் 20% குறைக்கப்பட்டதோடு அரசு அதிகாரிகள் தங்களது சொந்த தேவைக்காக அரசு தொலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதோடு தொலைபேசி கட்டணங்களை அவரவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அதிரடி கட்டளை வெளியிடப்பட்டது.

மேலும் சவுதி அரேபியாவின் உயர் மட்ட மன்னரின் ஆலோசனை குழுவான சூரா கவுன்சிலில் பணிபுரிபவர்களுக்கு 15%  சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. நான்கு வருடங்களுக்கு அவர்களுக்காக வழங்கப்படும் வீடு, வாகனம் மற்றும் அதற்கான பெட்ரோல் செலவுகளை  சவுதி அரசு குறைத்துள்ளது. சவுதி அரேபியாவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்து இது போன்ற அரசு துறைகளின் பணிபுரிபவர்களின் சம்பளங்கள் பிடிக்கப்படுவது என்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2014ஆம் ஆண்டு முதலே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதால் கடுமையான பொருளாதார நெருக்கடியை  அந்நாடு சந்தித்து வருகிறது.

அரசுப்பணிகளில் ஈடுபடுபவர்களில் பலர் தங்களுக்கு சம்பல உயர்வு வேண்டுமென ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக உயர் மட்ட குழு ஆலோசனை செய்து முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அது போல அரசாங்க பணிகளில் ஒபந்ததாரர்களாக பணிபுரிபவர்களின் ஒப்பந்தங்கள் புதுபிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல வெளிநாட்டுக்காரர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எத்துனை பேரி வேலை இழப்பார்கள் என்பது பற்றிய தெளிவான குறிப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இத்தகைய மாற்றங்கள் அடுத்த வாரம் இஸ்லாமிய புதுவருடம் துவங்க இருப்பதிலிருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது. அரசாங்க பணிகளில் 70% அந்நாட்டு பிரஜைகளே பணிபுரிய வேண்டும் என்கிற நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 120 பில்லியன் டாலர்களை சம்பளமாக, கொடுப்பனவாக செலவழித்து வருகிறது. இது ஆண்டு வருமானத்தைவிட அதிகம் சென்றுவிட்டதால், வெளிநாடுகளில் இருக்கும் சவுதியின் கையிருப்பு தொகைகளை திரும்ப பெற்றுவருகிறது. இதே போல பெட்ரோ, டீசல், எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சம்பளம் பிடிப்பான எல்லையில் எமன் நாட்டுடனான போரில் பங்கெடுத்து வரும் இராணுவ வீரர்களுக்கு பொறுந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு வரும் அரசு குடும்பத்தார்களின் செலவுகள் எந்தளவிற்கு குறைக்கப்படும் என்பது பற்றிய எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இவ்வளவு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் விஷன் 2030 என்ற திட்டத்தை வகுத்து எண்ணெய் வளத்தை தவிர்த்ஹ்டு வேறு வழிகளில் பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான முயற்சியை சவுதி அரேபியா அரசு மேற்கொண்டு வருகிறது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic