Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 27, 2016

உங்க தீர்மானமெல்லாம் எங்களை கட்டுப்படுத்தாது ! - உச்ச நீதிமன்றம் கொடுத்த சாட்டை அடி!

karnataka govt's resolution cannot control supreme court

காவேரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 6,000 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஆனால் காவேரி நீரை திறந்து விடாத கர்நாடகா, சட்டசபையை அவசரமாக கூட்டி உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த கூட்டத்தில் காவேரி நீர் கர்நாடகாவின் குடி நீர் தேவைக்கு மட்டுமே இருக்கிறது, இனியும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது என முடிவெடுத்தது.

இதற்கு மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மத்திய நீர் வளத்துறை, சட்டத்துறை மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

காவேரி விவகாரம் இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் லலித் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் கர்நாடக அரசின் இந்த தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பிய தமிழகம் சார்பில் ஆஜரான சேகர் நாப்தே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். ஆனால் கர்நாடகாவில் குடிக்க நீர் இல்லை என்பதால் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியவில்லை என்று கர்நாடக தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன் விளக்கம் அளித்தார்.

கர்நாடக சட்டசபையின் தீர்மானம் உச்சநீதிமன்றத்தை ஒரு போதும் கட்டுப்படுத்தாது என்று கூறிய உச்சநீதிமன்றம், உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்று கூறியது.

மற்ற மாநிலத்திற்கு எதிராக சண்டையிட உச்சநீதி மன்றத்தை ஒரு போதும் பயன்படுத்த கூடாது என்று கூறியதோடு அடுத்த இரு நாட்களுக்கு மொத்தம் 12 ஆயிரம் கன அடிநீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.

ஆனால் காவேரி நீரை திறந்து விடுவதில் சிக்கல் இருப்பதாகவும், சட்டசபை தீர்மானத்தை எதிர்த்து மாநில அரசால் தண்ணீரை திறக்க முடியாது என்று கர்நாடக தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத உச்சநீதிமன்றம், உத்தரவுக்கு பணியாமல் இருப்பது எந்த தீர்வையும் தராது என்று தெரிவித்தது.

எனவே கர்நாடக அரசு முடிவு செய்த‌ தீர்மானத்திற்கு எதிராக மேலும் 2 நாட்களுக்கு தலா 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic