இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்தக்கூடாது மாறாக அவர்களை வலிமைமிக்க சமுதாயமாக மாற்ற வேண்டுமென பிரதமர் மோடி தெரிவித்தார்.
கேரள மாநிலம் கோழிகோட்டில் பா.ஜ.கவின் மூன்று நாள் உயர்மட்ட குழு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பின்னர் பா.ஜ.கவின் தாய் கழகமான பாரதீய ஜன சங்கை உருவாக்கிய தீன தயாள் உபாத்யாவின் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய மோடி கூறியதாவது, "இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்தக்கூடாது, அவர்களை சமமானவர்களாக நடத்தி வலிமைமிக்க சமுதாயமாக மாற்ற வேண்டும். இந்தியாவில் அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டுமென்றால் வலிமைமிக்க சமுதாயத்தில் இருக்கக்கூடியவர்கள் குனிந்து வலிமை இல்லாத சமுதாயத்தின் கைகளை பற்றிப்பிடித்து அவர்களையும் உயர்த்திவிட வேண்டும். பாரதீய ஜனதா கட்சி ஏழைகளுக்கான கட்சி. மத்திய அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் என அனைத்தும் ஏழைகளின் மேம்பாட்டிற்காகவே இருக்கும்.
இந்தியாவில் இது நாள் வரை பின்பற்றப்படும் தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அதற்கான அலோசனைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வல்லரசு நாடுகளில் பின்பற்றப்படும் தேர்தல் முறையை நமது நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்." இவ்வாறு மோடி பேசினார்.

No comments:
Write comments