Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 15, 2016

25வது பணக்காரர் ஆனார் பதாஞ்சலி நிறுவனத்தின் தலைமை அதிகாரி


பாபா ராம்தேவ் நடத்தும் பதாஞ்சலில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆச்சார்யா பாலகிருஷ்ணா இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 25வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

யோகா குரு பாபா ராம்தேவின் முயற்சியில் நிறுவப்பட்ட பதாஞ்சலி நிறுவனம் இந்தியாவில் வேகமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் 94% பங்குதாரராக இருக்கும் ஆச்சார்யா பால கிருஷ்ணா தனக்கென சம்பளம் எதுவும் பெறவில்லை என்றாலும் அவருடைய சொத்து மதிப்பு தற்போது 25 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.  இந்தியர்களின் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் பஜாஜ் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் பஜாஜ், கோத்ரேஜ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆடி கோத்ரேஜ், பிரமால் நிறுவனத்தின் உரிமையாளர் அஜெய் பிரமால் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி 25வது இடத்தை பிடித்துள்ளார்.

பதாஞ்சலி நிறுவனம் இந்திய சந்தையில் ஏனைய நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக மாறி பெரும்பாலான மார்கெட்டின் பங்குகளை தன் வசப்படுத்திக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆண்டு ஒன்றுக்கு தற்போது பதாஞ்சலி நிறுவனம் ரூபாய் 5000 கோடிக்கு டர்ன் ஓவர் செய்வதாகும், வரும் ஆண்டில் இது 10,000 கோடியாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆச்சார்யா பால கிருஷ்ணா கூறும்போது பதாஞ்சலி நிறுவனம் குறைந்த லாபத்தின் அடிப்படையில் தான் செயல்பட்டு வருகிறது என்றும், அதன் லாப சதவிகிதம் 8 முதல் 10 வரை தான் என தெரிவித்துள்ளார். அவ்வாறு கிடைக்கப்பெறும் லாபத்தினை மறு முதலீடு செய்து இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

பதாஞ்சலி நிறுவனம் பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஏனைய நிறுவனங்களைப்போல் முதலில் சந்தையின் நிலவரம் குறித்த ஆராய்ச்சி ஏதும் செய்யாமலேயே பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. பதாஞ்சலி நிறுவனத்தின் சார்பில் ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கும் திட்டமும் இருப்பதாக பாபா ராம் தேவ் சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic