Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 15, 2016

உயிரோடு எரிக்க முயற்ச்சி! உயிர் தப்பிய இஸ்லாமிய குடும்பம்


கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தினரை காருக்குள் வைத்து, வன்முறையாளர்கள் எரித்துக் கொல்ல முயன்றதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் நவாஸ் பாஷா. இவரின் சகோதரர் மனைவி பிரசவத்திற்காக, அவரது சொந்த ஊரான மாண்டியா சென்றுள்ளார். இந்நிலையில், அவரை பார்ப்பதற்காக, நவாஸ் பாஷா, தனது குடும்பத்தினருடன் கடந்த 11ம் தேதி காரில் மாண்டியா சென்றுவிட்டு, மறுநாள் தமிழகம் திரும்பியுள்ளார்.

அப்போது, மாண்டியாவின் புறநகர் பகுதியான நந்தினி பால் டெப்போ அருகே வந்தபோது, வன்முறையில் ஈடுபட்டிருந்த கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர், நவாஸ் பாஷாவின் காரை வழிமறித்துள்ளனர். உடனே, அந்த கார் மீது பெட்ரோலை ஊற்றி, தீ வைத்து, எரித்துள்ளனர்.

இதையடுத்து, காரில் இருந்து தப்பிய நவாஸ் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினர், பெரும் போராட்டத்திற்குப் பின்னர், ரயில் மூலமாக, தமிழகம் வந்து சேர்ந்தனர். இதுதொடர்பாகக் கர்நாடகா மாநில அரசிடம் இருந்து, உரிய இழப்பீடு பெற்றுத் தர வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் நவாஸ் பாஷா புகார் அளித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic