Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 2, 2016

சென்னையில் விநாகயகர் சிலை வைக்க 2500 இடங்களில் அனுமதி!


ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் இந்து அமைப்பினரும், பொது மக்களும் விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று சிலைகளை வைக்கும் போது போலீசாரிடம் உரிய அனுமதியை பெற வேண்டும்.

இதன்படி, கடந்த ஆண்டு சென்னையில் 2500 இடங்களில் போலீஸ் அனுமதியுடன் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையிலேயே சிலைகள் வைக்க போலீசார் அனுமதித்துள்ளனர்.

3 அல்லது 5 நாட்கள் பூஜை முடிந்த பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துக்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது. வருகிற 10 மற்றும் 11-ந் தேதிகளில் ஊர்வலம் நடத்தப்படுகிறது.

இந்த 2 தினங்களும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic