Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 2, 2016

ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்!


இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இலங்கையில் உள்ள 103 படகுகளை விடுவிக்க வேண்டும், சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். பாரம்பரிய மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

வேலை நிறுத்தத்தை தொடர்ந்து இன்று கடலில் இறங்கி மீனவர்கள் கருப்பு கொடியுடன் போராட்டம் நடத்தினர். ராமேசுவரம் துறைமுக கடலில் நடந்த இந்த போராட்டத்தில் மீனவ சங்க தலைவர்கள், மீனவர்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோ‌ஷமிட்டனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic