மூன்று தலாக் விவகாரத்தில் 4 வாரத்திற்குள் மத்திய அரசு தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கவுன்சில் தனியார் சட்டத்திற்குள் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என தெரிவித்தனர். இதற்கு நீதிமன்றங்கள் தரப்பில் மறுப்பு தெரிவித்ததோடு மூன்று தலாக் விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என கூறியது. இதற்கு மத்திய அரசு தரப்பில் கூடுதல் சோலிசிட்ட ஜெனரல் துஷார் மேத்தா இது தொடர்பாக விளக்கம் கொடுக்க மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டதன் காரணமாக நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாரதீய முஸ்லிம் மஹிலா அன்டோலன் என்ற அமைப்பின் சார்பில் ஜாக்கியா சோமன் என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் மூன்று தலாக் முறையை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமென்றும், இது இஸ்லாமியர்களின் புனித நூலான குரானுக்கு முரணாணது என்று அந்த மனுவில் குறிபிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தனியார் சட்டத்திற்குள் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
பலதார மணம், விவாகரத்து போன்றவைகள் இஸ்லாமியர்களின் உள்விவகாரம் என்றும், அதனை மாற்றுவதற்கோ திருத்துவதற்கோ எவருக்கும் அதிகாரம் இல்லை என்பதால் இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது என முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments