மாதா அம்ரிதனந்தமாயின் 63வது பிறந்த நாள் விழா இன்று கோலகலமாக நடைபெறவிருக்கிறது.
கேரள மாநிலம் கொல்லத்தில் தலைமை ஆசிரமம் நடத்தி வரும் மாதா அம்ரிதனந்தமாயின் 63வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெறவிருக்கிறது. இதற்காக அவரது ஆசிரமம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஆசிரம்த்திற்குள்ளேயே பிரம்மாண்ட மேடைகள் அமைக்கப்பட்டு, பஜனைகளும், பூஜைகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவின் பிறந்த நாளை கொண்டாட அவரது பக்தர்கள் ஆசிரமத்திற்கு குவிந்த வண்ணம் உள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க மாதா அம்ரிதனந்தமாயி நேற்றே அவரது ஆசிரமத்திற்கு விஜயம் செய்துவிட்டார். பிறந்த நாள் விழாக்கொண்டாட்டங்கள் முடிந்தவுடனேயே ஆசிரமத்தை விட்டு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று குருபூஜா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதாவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு இன்று நடக்கும் நிகழ்ச்சிகளில் இன்டெர்னெட் மூலம் பிரதமர் உரையாற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments