Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 27, 2016

ஜெயிலுக்கு சென்றும் திருந்தாத சாமியார்!

compares nurse's cheeks with kashmir apple

16வயது இளம்பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பிரபல வட இந்திய கிழட்டு சாமியார் சிறைக்குச்சென்றும் திருந்தியபாடில்லை.

வட இந்திய சாமியாரான ஆசாராம் பாபு கடந்த 2013ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தில் பணிபுரிந்த 16 வயது பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அன்று முதல் சிறைச்சாலையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் சாமியார் பல முறை ஜாமீன் கோரியும் "கடல்லையே இல்லையாம்..." என்கிற பாணியில் நீதிமன்றம் மருத்துவிட்டது.

இருந்த போதிலும் அவருடைய வழக்கறிஞர் அவரின் வயோதிகத்தை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதனால் இரக்கப்பட்ட நீதிமன்றம் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. இதனை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆசாராம் பாபு.

மனுஷன் அங்கே சென்றும் சும்மா இருக்கவில்லை. சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் அவருக்கு உணவு கொண்டு சென்ற செவிலியிடம் தனது வேலையை காட்டியுள்ளார். மருத்துவமனையில் பணி புரிந்த அந்த செவிலி ஆசாராம் பாபுவிற்காக ரொட்டியும் வெண்ணையும் கொண்டு சென்றுள்ளார். அதனை வாங்கி கொண்ட சாமியார் வெண்ணையை விட நீ மிருதுவாய் இருக்கிறாய், எனக்கு எதற்கு வெண்ணை என இந்த விளக்கெண்ணய் கேட்டிருக்கிறார். உனது கன்னத்தை பார்க்கும்போது கஷ்மீர் அப்பிள் போல இருக்கிறது, நீ கஷ்மீரை சேர்ந்தவளாகத்தான் இருக்க முடியும்" என தனது சில்மிஷ வேலையை காட்டியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த செவிலி உடனே போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். தற்போது என்ன செய்வதென்பது அறியாமல் காவல்துறையினர் முழித்துக்கொண்டிருக்கின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic