Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 27, 2016

மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு ஜாமீன் மறுப்பு!

bail plea rejecte for malegoan blast accused

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் இராணுவ அதிகாரி பிரசாத் புரோஹித்திற்கு தேசிய புலனாய்வு ஏஜென்ஸி மேற்கொண்டு வரும் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இந்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிபதி எஸ்.டி. தேகாலே தள்ளுபடி செய்தார். மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியான பிரசாத் புரோஹித் ஜாமீன் வேண்டி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் எந்த ரீதியிலும் ஈடுபடவில்லை எனவும், தான் நிரபராதி என தெரிவித்திருந்தார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த புலனாய்வு அதிகாரிகள், புரோஹித்தின் விளக்கங்களை விசாரணையின் போது ஆலோசிக்க வேண்டுமென்றும் தற்போது கூடாது எனவும் வாதிட்டனர்.

மாலேகான் குண்டுவெடிப்பில் பிரசாத் புரோஹித் ஈடுபட்டதற்கான எண்ணற்ற ஆதாரங்கள் இருப்பதாகவும், அவரை பிணையில் விடக்கூடாது எனவும் வலியுறுத்தினர். இதனை விசரித்த நீதிபதி இறுதியில் புரோஹித்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கினை என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்துத்துவா அமைப்பைச்சேர்ந்த‌ சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், கர்னல் புரோஹித் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic