Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 6, 2016

ஒரு பயலும் இலவச கல்வி கொடுப்பதற்கு தயாரில்லை..!


ஆட்சி செய்பவர்கள் யாரும் தங்களுடைய ஆட்சியை தக்கவைப்பதற்காக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என்று உத்திரவாதம் கொடுக்க தயாரில்லை. மக்களை ஏமாற்றுவதற்கான இலவச அறிவிப்புக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

தமிழகத்தில் ஆட்டுக்குட்டி முதற்கொண்டு மிக்ஸி, கிரைண்டர் என அனைத்தையும் கொடுத்தாகிவிட்டது. மக்களும் ஓசிக்கு அழைபவர்கள் தான் என்பதை நிரூபித்தவர்களாக வாக்களித்து வெற்றி பெற வைக்கின்றனர். தமிழகத்தில் தான் இப்படி என்றால் தற்போது இந்த கவர்ச்சி இலவச அறிவிப்புகள் உத்திரபிரதேசத்தையும் தொற்றிக்கொண்டுள்ளது. அம்மாநில முதலைமைச்சர் அகிலேஷ் யாதவ் அடுத்த வருடம் ஏழைகளுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன் வழங்கப்படும் என அறிவித்துள்லார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அரசுக்கும், மக்களுக்கும் நேரடித் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக "சமாஜவாதி ஸ்மார்ட்போன்' திட்டத்தைத் தொடங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மக்களின் கருத்துகளை நேரடியாகப் பெறுவதற்கும் இந்தத் திட்டம் உதவும்.
மாநில அரசின் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள், செயலிகளை (ஆப்) கொண்டு எழுத்துரு, ஆடியோ அல்லது விடியோ வடிவங்களில் மக்களுக்கு அனுப்பப்படும்.

ஸ்மார்ட்போனைப் பெறுவதற்கு தகுதிவாய்ந்த பயனாளிகள் உயர்நிலைக் கல்வி முடித்தவர்களாகவும், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
மேலும் அவர்களது குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களைக் கொண்டு ஸ்மார்ட் போன் பயனாளிகள் இணையம் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும்.

முன்பதிவு அடிப்படையில், பயனாளிகளுக்கு அடுத்த ஆண்டு பிற்பாதியில் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு தரமான கல்வியை கொடுத்து, படித்த படிப்பிற்கேற்ற வேலை அமைந்துவிட்டால் அவர்களே ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக்கொள்வார்கள். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் சின்ன எழும்பு துண்டுகளை வீசிவிட்டு பதவி சுகத்தை அனுபவிக்கிறார்கள் என்பதே நிதர்சனம். அப்படி இல்லையென்றால் டீ, சமோசா திண்பதற்கே 9 கோடி செலவழித்திருப்பார்களா என்ன..?

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic