அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி வாக்குப்பதிவும் 8ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபருக்கான அறிவிப்பு நடைபெற உள்ள நிலையில், போட்டியாளர்களின் நேரடி விவாதங்கள் நடைபெறவுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடியாக மக்கள் முன்னாள் வந்து விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். இம்முறையும் அவ்வாறே நடைபெறவிருக்கிறது. அதிபர் தேர்தலில் முன்னனியில் இருக்கும் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் மற்றும் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் விவாதம் செய்யும் நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி துவங்க இருக்கிறது.
இந்த தேர்தலில் முதன் முறையாக என்.பி.சி தொலைக்காட்சியும், ஈராக்-ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்ற முன்னாள் இராணுவ வீரர்களும் இணைந்தும் "கமான்டர் இன் சீஃப் ஃபாரம்" என்ற பெயரில் நேரடி விவாதம் நடைபெறவுள்ளது. முன்னாள் மற்றும் தற்போது பணியில் இருக்கும் இராணுவ வீரர்கள் மட்டுமே பாரவையாளராக கலந்து கொண்டு அதிபர் வேட்பாளர்களிடம் கேள்விகளை எழுப்புவார்கள்.
என்பிசி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஹிலரி கிளிண்டனும், டொனால்ட் ட்ரம்பும் பங்கேற்கிறார்கள்.
தேசிய பாதுகாப்பு, இராணுவ விவகாரங்கள், முன்னாள் வீரர்கள் நலம் சார்ந்த விசயங்கள் ஆகியவற்றை ஒட்டிய கேள்விகள் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கேட்கப்படும். ஹிலாரிக்கும், ட்ரம்புக்கும் அவரவர் இராணுவ விவகார கொள்கைகளை தெரியப்படுத்தும் வாய்ப்பாக இது அமையும்.
அடுத்ததாக செப்டம்பர் 26ம் தேதி முதல் அதிபர் வேட்பாளர் விவாதம் நடைபெற உள்ளது. அக்டோபர் 4ம் தேதி துணை அதிபர் வேட்பாளர் விவாதமும், அக்டோபர் 9 மற்றும் 19ம் தேதி மீண்டும் அதிபர் வேட்பாளர்கள் விவாதமும் நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி கடும் போட்டி மாநிலங்களான ஃப்ளோரிடா,அயோவா, ஒஹாயோ இல்லாமலே, ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என என்பிசி தொலைக்காட்சி, கணித்துள்ளது.

No comments:
Write comments