ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இதனை அடுத்து புதிய ஆளுநராக உர்ஜித் படேல் பதவியேற்றுக் கொண்டார்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உர்ஜித் படேல் பொறுப்பு வகித்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை (செப்.4) முதல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஆளுநராக இருந்த உர்ஜித் படேலின் பதவிக்காலம், கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது. எனினும், 2-ஆவது முறையாக அப்பதவியில் உர்ஜித் படேலை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி மீண்டும் நியமித்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், அந்தப் பதவியை 2-ஆவது முறையாக வகிக்க விருப்பமில்லை என்று சூசகமாக அறிவித்தார். இதையடுத்து, ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநரைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது. இதற்கு பல்வேறு பொருளாதார நிபுணர்களின் பெயர்களை மத்திய அரசு பரிசீலித்து வந்தது. முடிவில், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேலை மத்திய அரசு கடந்த ஆக்ஸ்ட் மாதம் நியமித்தது.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக உர்ஜித் படேல் பதவி வகித்த காலத்தில், பணக் கொள்கை தொடர்பான திட்டத்தை வலுப்படுத்தவும், திருத்தியமைக்கவும் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு தலைமை தாங்கினார்.
சர்வதேச செலாவணி நிதியத்திலும் அவர் பணியாற்றியுள்ளார். சர்வதேச செலாவணி நிதியம் சார்பில் ரிசர்வ் வங்கியில் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 1997-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அந்த காலகட்டத்தில், சந்தை நிலவரம், வங்கிச் சீர்திருத்தம், ஓய்வூதியச் சீர்திருத்தம், அன்னியச் செலாவணி சந்தையின் பரிணாமம் ஆகியவை தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனை வழங்கி வந்தார். 1998-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை மத்திய நிதியமைச்சகத்தில் ஆலோசகராக இருந்தார்.
இதேபோல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிஎஃப்சி, எம்சிஎக்ஸ், குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை உள்பட பல்வேறு தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை உர்ஜித் படேல் வகித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு உயர்நிலைக் குழுக்களிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பிஹெச்டி பட்டமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பில். பட்டமும், லண்டன் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி பட்டமும் பெற்றுள்ளார்.

No comments:
Write comments