Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 3, 2016

அம்மா உணவகத்தில் முறைகேடு - மத்திய தனிக்கைத்துறை குற்றச்சாட்டு!


தரம், நோக்கம், வருவாய் என்று அனைத்திலும், ‘அம்மா’ உணவங்கள் தோல்வி அடைந்துள்ளன என்று மத்திய தணிக்கைத்துறை(சி.ஏ.ஜி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தின், 15-வது சட்டசபைக்கூட்டத் தொடர், ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடர், செப்டம்பர் 2-ம் தேதி நிறைவடைந்தது. சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளன்று, சி.ஏ.ஜி. தனது அறிக்கையை, சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.அரசின் வருவாய், கல்வி, சுகாதரம், குழந்தை நலன், இலவச லேப்டாப் என்று அனைத்தையும் போட்டு வாங்கியசி.ஏ.ஜி, அம்மா உணவகங்களையும் விட்டு வைக்கவில்லை.

சி.ஏ.ஜி அறிக்கையின்படி, அம்மா உணவகங்களால், தமிழக அரசுக்கு 63 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், அம்மா உணவகங்களுக்காக நடைபெற்ற கொள்முதல் நேர்மையாக நடக்கவில்லை. அதிலும் பல முறைகேடுகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சி.ஏ.ஜி.அறிக்கையில், “குறைந்த விலையில், ஏழை-எளிய மக்களுக்கு தரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட அம்மா உணவங்கள், அந்த நோக்கத்தில் தோல்வியடைந்துள்ளது.

2014-15 நிதியாண்டில், அம்மா உணவகத்திற்காக செலவழிக்கப்பட்ட தொகை,100 கோடி. வருமானம் என்ற வகையில் அரசுக்கு திரும்பக் கிடைத்தது வெறும் 37 கோடியே 56 லட்சம் மட்டும்தான். இதனால், நஷ்டம் 63 கோடியே 4 லட்சம் ரூபாய். இந்த செலவுத் தொகையில் 5 கோடியே 69 லட்சத்துக்கு முறையான கணக்கு வழக்குகள் இல்லை. அவை முறைகேடு செய்யப்பட்ட தொகையாக கணக்கில் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic