இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக 3 பாலியல் பலாத்கார வழக்குக்குகள் பதிவாகின்றன.
இந்தியா முழுவதும், கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு நாடு முழுவதும் 34,651 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த பாலியல் பலாத்கார வழக்குகளில் அதிக்கபடியான வழக்குகள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பதிவாகியுள்ளன. அந்த மாநிலத்தில் மட்டும் 4,391 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எந்தெந்த மாநிலத்தில் எவ்வளவு வழக்குகள் பதிவாகியுள்ளன என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த தகவல் தெரிவிப்பதாவது :
யூனியன் பிரதேசங்களில் டில்லி முதலிடம் பெறுகிறது. அங்கு 2,199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான மொத்த பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் 16 ,989 வழக்குகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,633 வழக்குகளும், புதுச்சேரியில் 47 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம், இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், சராசரியாக 3 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் வழக்குகளே இந்த எண்ணிக்கையில் இருக்கும்போது, வழக்கு தொடுக்க பயந்து, மேலும் கட்டப்பஞ்சாயத்து மூலம் தீர்த்து வைக்கப்படும் பாலியல் பலாத்கார குற்ற எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், நம் தேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எப்படியெல்லாம் இருக்கிறது என்று வெட்கி தலைகுனிய செய்கிறது.

No comments:
Write comments