Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 5, 2016

அருந்ததி ராய்க்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் சட்டமன்றம்!

 

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண சட்டமன்றத்தில் காஷ்மீர் பற்றி உரையாற்ற இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சட்டசபையின் உறுப்பினர் ஷேக்அலாவுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் வன்முறைகளை விளக்க இந்திய எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததி ராயை அழைக்கலாம் என அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கு பதிலளித்த தொழிலாளர் மற்றும் மனித வள அமைச்சர் ராஜா அஷ்ஃபக் சர்வார், “இந்து தொடர்பான நடவடிக்கைகளை நமது வெளியுறவுத் துறையின் அறிவுறுத்தலின் பேரில்தான் எடுக்க முடியும்” என்றார். அதுபோல இந்தியராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கரின் கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லி காஷ்மீரிகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதோடு வன்முறையையும் தூண்டுகிறது” என்று பேசினார்கள். சட்டசபையின் பிறஉறுப்பினர்களும், பள்ளத்தாக்கில் நடக்கும் வன்முறைக்கு இந்தியாவை விமர்சித்தனர்.

ஜூலை ஒன்பதாம் தேதி, போராளி புர்ஹான் வானி பாதுகாப்பு படையோடு நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட பின்னர்தான் இவ்விடத்தில் வன்முறை பெரிய அளவில் பெருகியிருக்கிறது என்று குற்றம்சுமத்தப்பட, நாடாளுமன்ற செயலாளர் ரானா அஷ்ரத், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்த பிரச்னையை சர்வதேச மட்டத்தில் எழுப்ப குழுவை அமைத்திருப்பதாகக் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் மஹ்மடூர் ரஷீத், பாகிஸ்தானின்ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் அனைத்து செயல்களுக்கு எதிராகவும் கண்டனம் தெரிவித்தார்.

MQMஇன் நிறுவனர் மற்றும் தலைவர் அல்தாஃப் ஹுசைனை மறைமுகமாக குறிப்பிட்டு, ஒரு மனிதன் பிரிட்டனில் உட்கார்ந்துக் கொண்டு நாட்டின் மரியாதைக்கும் இறையாண்மைக்கும் எதிராக பேசுவதாகத் தெரிவித்தார். ஹுசைனுக்குஎதிராக பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ரஷீத் கவலை தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic