Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 5, 2016

ஜியோவால் திரைப்படத் துறைக்கு நஷ்டம்

 

ஜியோ சிம், பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது. ரூபாய் 251 போனை புக் செய்தவர்களை நக்கல் செய்தவர் முதற்கொண்டு, இலவச ஆஃபர் உள்ள இந்த சிம்மினை வாங்க முந்தியடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இச்சேவையால் திரைப்பட உலகம் பெரும் நஷ்டத்துக்குத் தள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருட்டி விசிடி மூலம் திரைப்படங்கள் வெளியாவது திரைத்துறையினருக்கு பெரும் தொல்லையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோ 4ஜி சேவையை வெளியிட்டு, இந்த வருட இறுதி வரை இலவசம் என அறிவித்தது. இந்த ஜியோ சேவையின் மூலமாக ஒரு திரைப்படத்தை மிக குறுகிய நொடிகளில் எளிதாக டவுன்லோடு செய்ய முடியும். புதிதாக திரைக்கு வரும் திரைப்படங்கள் அன்றே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி விடுகிறது.

தற்போது அதிவேக இணைப்பு கொண்ட ரிலையன்ஸ் ஜியோ சேவையைப் பயன்படுத்தி மொபைலில் திருட்டுத்தனமாக படத்தை பதிவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, திரை உலகுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic