பஞ்சாப் மா நிலம் பாட்டியாலாவில் முகத்தை மறைத்து கொண்டு செல்வதற்கு தடை விதிக்கபப்ட்டுள்ளது.
குற்றங்களை தடுத்து, குற்றவாளிகளை பிடிப்பதற்காக பாட்டியாலா மாவட்ட நிர்வாகம் பெண்கள் இருசக்கர வாகனங்களில் செல்லுபோது வாகனத்தை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்துவருபவர்களும் முகத்தை மறைத்தவாரு செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பெண்கள் துணையை கொண்டோ,அல்லது தங்களது துப்பட்டாவை கொண்டோ முகத்தை மறைத்துக்கொண்டு செல்வது வழக்கம். பெரும்பாலும் தூசி மற்றும் சூரிய ஒளியிலிருந்து தங்களது சருமத்தை பாதுகாத்துக்கொள்வதற்காகவே இவ்வாறு முகத்தை மறைத்துக்கொண்டு செல்கின்றனர். ஆண்களிலும் பலர் டூவீலரில் செல்லும் போது கர்சீஃபை கொண்டு தங்களது முகத்தை மறைக்கின்றனர். இத்தகைய செயல்களுக்கு தற்போது மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
குற்றவாளிகள் குற்றங்களில் ஈடுபட்டு தங்களது முகத்தை மறைத்துக்கொண்டு செல்வதால் எளிதாக அவர்கள் தப்பி விடுகின்றனர் என்பதற்காகவே இந்த தடையை கொண்டு வந்துள்ளதாக காவல்துறை துணை ஆணையர் ராம்வீர் தெரிவித்துள்ளார். பாட்டியாலா மட்டுமல்லாது பஞ்சாப் மாநிலத்தின் ஏனைய நகரங்களான அம்ரிஸ்டர், லூதியானா ஜலந்தர், ரோபர் ஆகிய நகரங்களிலும் இதே தடை அமலுக்கு வந்துள்ளது.
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஜகதீஷ் கக்னஜாவை ஜலந்தர் நகரத்தி வைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றனர். அவர்கள் அனைவரும் முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு சென்றதால் இதுவரை அவ்வழக்கில் எந்த துப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments