தமிழகத்திற்கு காவேரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (வெள்ளிக்கிழமை) முழு பந்த் நடத்த அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது.
காவேரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தண்ணீர் திறந்துவிடவேண்டுமென கர்நாடக அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனை எதிர்த்து கன்னட விவசாயிகள், கன்னட அமைப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழக அரசுக்கு எதிராகவும், அம்மாநில அரசுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிராகவும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தால் இரு மாநிலங்களுக்கிடையேயான உறவு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இ ந் நிலையில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நாளை நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கின்றது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றது. இதனால் நாளை நடைபெறும் பந்த்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்படும். வாகனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரிகள், பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல தனியார் நிறுவனங்களும் தனது அலுவலக பணியாளர்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. போராட்டத்தினை அமைதியான முறையில் நடத்த வேண்டுமென்றும், பொதுச்சொத்துக்களுக்கு எந்த விதத்திலும் சேதம் ஏற்படுத்தக்கூடாது என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநிலம் தழுவிய போராட்டம் என்பதால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்தும் சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Write comments