காவேரி விவகாரத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைகளுக்கு பாஜகதான் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது. கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிருந்தாகாரத், மத்தியக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், கே.வரதராஜன், கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி,
மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் பா.செல்வசிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும், காவேரி விவகாரம், உள்ளாட்சி தேர்தல் பற்றியும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அளித்த பேட்டியில்,
காவேரி பிரச்னையில், அரசியல் ஆதாயத்துக்காக பாஜக கர்நாடகாவில் வன்முறையைத் தூண்டி விடுகிறது. மத்திய அரசு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதில் மவுனம் சாதித்து வருகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இருமாநில மக்களுக்கிடையே நல்லெண்ணத்தை உருவாக்கவும், தொழில்கள் அமைதியாக நடைபெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:
Write comments