Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 15, 2016

காவேரி ஆற்றில் இரத்தத்தை கலந்து விவசாயிகள் நூதன போராட்டம்!



கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் நேற்று 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள், கன்னட அமைப்பினர் அந்தப் பகுதியில் ஓடும் காவேரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊசி மூலம் தங்களது உடலில் இருந்து இரத்தத்தை எடுத்து ஒரு பாலித்தீன் பையில் சேகரித்தனர். பின்னர் அந்த பாலித்தீன் பையில் இருந்த இரத்தத்தை காவிரி ஆற்று நீரில் கலந்து நூதன போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், அப்போது அவர்கள், கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்திலேயே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது. எங்களிடம் தண்ணீர் இல்லை. எனவே தண்ணீர் தர முடியாது. எங்களிடம் இரத்தம் மட்டுமே உள்ளது. அந்த இரத்தத்தை தமிழகத்திற்கு தருகிறோம் எனக் கூறி காவிரி ஆற்றில் இரத்தத்தை கலந்து அனுப்பி நூதன போராட்டம் நடத்தியுள்ளோம். காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ள நீரை நிறுத்தும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்றனர். 

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic