முக்கியமான முடிவுகளை சுதந்திரமாக எடுக்கும் வகையில் மத்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இருக்க வேண்டும் என்று அதன் ஆளுநர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பு வகித்து வரும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் இன்றுடன் (செப். 4) நிறைவுக்கு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் அமைந்துள்ள புனித ஸ்டீபன்ஸ் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், மாணவர்களிடையே பேசியதாவது:
நடுத்தர மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் அதிகம் வசிக்கும் இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் நீடித்திருக்க வைத்திருப்பது ரிசர்வ் வங்கியின் கடமையாகும். சர்வதேசப் பொருளாதாரக் காரணங்களால் உள்நாட்டு மக்கள் பாதிக்காமல் இருக்கும் வகையிலான விவேகமுடன் கூடிய கொள்கைகளின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும்.
எனது பதவிக் காலத்தில் பல்வேறு முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி பின்பற்றியது. ஆர்பிஐ ஆளுநராகப் பதவி வகிப்பவருக்கு சில முக்கியப் பொறுப்புகளும், கடமைகளும் உள்ளன. அந்த இடத்தில் இருப்பவர்கள் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
கல்லூரி, பள்ளி உள்பட இளைஞர்கள் நிறைந்திருக்கும் மன்றங்களில் பேச அழைப்பு வந்தால், அதைத் தட்டிக் கழிக்காமல் புதிய தலைமுறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை சமூகப் பொறுப்புடன் அவர்கள் ஆற்றுவது அவசியம்.
பொதுவாக ஆர்பிஐ ஆளுநர் பொறுப்பு என்பது மத்திய அமைச்சரவைச் செயலருக்கு நிகரான பதவியாகும். ஆனால், அமைச்சரவைச் செயலருக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்கள் ஆர்பிஐ ஆளுநருக்கு இருப்பதில்லை. அதை அவர்களுக்கும் வழங்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி எடுக்கும் பொருளாதார ரீதியான நடவடிக்கைகளை, அரசு அமைப்புகள் பல கட்ட ஆய்வுக்குட்படுத்துகின்றன. இதனால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற தருணங்களில் ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பது அவசியம்.
அதேவேளையில், அதன் செயல்பாடுகள் கட்டற்ற வகையில் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ரிசர்வ் வங்கிக்கும் சில வரம்புகள் விதிக்கப்பட்டு அதற்குள்தான் இயங்க வேண்டும் என்றார் ரகுராம் ராஜன்.

No comments:
Write comments