Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 4, 2016

கஷ்மீரை சுடுகாடாக மாற்றுவோம்! - தீவிரவாத தலைவன் மிரட்டல்


காஷ்மீரில் நடந்துவரும் வன்முறைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நினைக்கும் இந்திய அரசின் முயற்சியை தடுக்க அங்கு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி காஷ்மீரை சுடுகாடாக மாற்றுவோம்என்று ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவன் மிரட்டல் விடுத்துள்ளான்.

காஷ்மீரில் அமைதியான முறையில் தீர்வு காண நினைக்கும் இந்திய அரசின் முயற்சிகளை தடுக்க தற்கொலைப்படை தீவிரவாதிகளை அங்கு அனுப்புவோம் என்று ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சயத் சலாவுதின் மிரட்டல் விடுத்துள்ளான்.

காஷ்மீரில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு என்பதற்கு இடமே கிடையாது. சண்டையின் மூலம் தான் இதற்கு தீர்வு வரும். சுமூக தீர்வை நாடும் முயற்சியை குலைக்க தற்கொலைப்படை தீவிரவாதிகளை கஷ்மீருக்குள் அனுப்புவோம். இந்திய இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி அப்பகுதியை சுடுகாடாக மாற்றுவோம் என்றும் சயீத் சலாவுதின் தெரிவித்துள்ளான்.

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாராளுமன்ற பிரதிநிதிகள்குழு இன்று கஷ்மீர் சென்றுள்ள நிலையில், பாகிஸ்தானின் செயல்பட்டுவரும் தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic